புலிகள் பாரிய இன அழிப்புடன் மேற்குலக/ பிராந்திய கூட்டணிகளினால் அழிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் !

இதுவரை படைத்துறை/ புவிசார் அரசியல் காரணங்கள் மட்டுமே  மேலோட்டமாக அதுவும் இன்றைய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளை எதிர் நிலையில் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கி வெளிவந்த ஆய்வுகளே அனேகம்.


ஆனால் உண்மையான காரணங்கள் இன்னும் ஆராயப்படவில்லை..

அதில் முதன்மையானது தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானம்/ நிர்வாக அடுக்கு.

போரை நடத்திக் கொண்டே சமகாலத்தில் புலிகள் உருவாக்கியிருந்த இதன் பரிமாணத்தை சமாதான காலத்தில் பார்த்து அதிர்ந்து போன மேற்குலக அச்சமும் புலிகளின் அழிவுக்கு வலுச்சேர்த்த முக்கிய காரணி.

ஒரு புதிய நாடு உருவாவது புதிதல்ல, ஆனால் மேற்குலகின் ஒத்துழைப்பின்றி / அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தேசக் கட்டுமானத்தில் புதிய நிர்வாகச் சிந்தனைகளோடு புவியியல்/ வரலாற்று அடிப்படையில் புதிய பரிமாணங்களுடன் தமிழீழம் உருவாவதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒரு தமிழ்த் தேச சிந்தனையாளர் குறிப்பிட்டது போல் தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலின் வரலாற்றை பின்னோக்கி தள்ளியிருக்கும்..

இன்னொரு ஆய்வாளரான சேது சபார் புலிகள் இன்று இருந்திருந்தால் அவர்களின்   தேச கட்டுமான யுக்தியின் பரிமாண வெளியில் ஒரு செய்மதியைக் கூட ஏவ முயன்றிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மிகையல்ல, ஏனெனில் ஒரு அரசாக சிறீலங்கா இடமும்/ நிதியும்   ஒதுக்காத விண்வெளி ஆய்வு மையத்திற்கு புலிகள் மல்லாவிப் பகுதியில் இடம் ஒதுக்கியிருந்த கதை பலருக்குத் தெரியாது.

அந்தளவிற்கு புலிகளின் தேசக் கட்டுமானச் சிந்தனை இருந்தது.

இந்தப் படத்திலுள்ள 'தமிழீழ சூழலியல் நல்லாட்சி ஆணையம்" உருவாக்கப்பட்டதும் அது உலகளவில்  பல ஆய்வுப் பட்டறைகளை நடத்தியதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

சமகாலத்தில் வாழ்வதால் புலிகளின் போராட்டத்தையும் அது உருவாக்கிய பரிமாண மாற்றங்களையும் நம்மால் உணர முடியவில்லை.

ஆனால் மனித குல  வரலாற்றில் இது ஒரு பெரும் பிரளயமாகப் பதிவாகும்.
-பரனிகிருஸ்னரஜனி-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.