கேலி செய்த நபருக்கு செருப்படி வழங்கிய ஆத்மிகா.!

தமிழ் திரையுலகிற்கு ஹிப் ஹாப் தமிழன் ஆதி நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிவர் நடிகை ஆத்மிகா. நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட மகளீர் தினத்தை முன்னிட்டு., அனைவரும் பல வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.


அதே போன்று இணையத்தை தற்போது கைவசம் வைத்துள்ள இணையதள நெட்டிசன்கள் மற்றும் மீம் தயாரிப்பாளர்கள் திரைத்துறையில் இருக்கும் ஆண் நடிகர்கள்., பெண்கள் வேடமிட்டு நடித்திருப்பதை பதிவேற்றி., அதில் ஆத்மிகாவின் புகைப்படத்தையும் வைத்து பதிவேற்றியுள்ளார்.
இந்த மீம் சமூக வலைதளத்தில் வைரலாகவே., இந்த மீமை தயாரித்த நபருக்கு கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இவர் பதிவு செய்த கருத்திற்கு ரசிகர்களும் தங்களின் ஆதரவை தந்ததை அடுத்து., அந்த மீம் தயாரித்த நபருக்கு செருப்படி வழங்கப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
ஆத்மிகா பதிவு செய்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது., இது போன்ற கீழ்த்தரமான சிந்தனையுடன் சிறு வயதில் இருந்தே வளர்ந்திருக்கிறாயோ? என்று எண்ணி வருந்துகிறேன். கடவுளின் படைப்பால் நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஒவ்வொருவருக்கு ஒரு அழகு., அவர்களின் தோற்றத்தை வைத்து ஏதும் மதிப்பிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.