வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ள Crew Dragon!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவும் SpaceX எனும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து விண்ணிற்கு செலுத்திய Crew Dragon  என்ற சோதனை விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுளோரிடா மாநிலத்திற்கு அருகேயுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் Crew Dragon விண்கலம் தரையிறங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த முயற்சியைத் தொடர்ந்து பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏழு பேர் அமரக்கூடிய குறித்த விண்கலத்தில் சோதனைக்காக மனிதர்களுக்குப் பதிலாக உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன. கடந்த 2ஆம் திகதி விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.