புலம்பெயர் மண்ணில் “இராவணகாவியம்“ இளையோரின் பங்கும்!!

தமிழர் மரபில் ஆரியரின் அழுத்தம் கரணியமாக பல வரலாற்று பிறழ்வுகள் நிகழ்ந்துள்ளது. அதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. இராமாயணம் கம்பனால் மொழிபெயர்க்கப்பட்டு கம்பராமாயணமாகி தமிழ் அலங்கரிக்கப்பட்டும் தமிழர் இனம் முரண்பட்ட அரக்கவினமாகவும் காட்டப்பட்டது.
புலவர்  குழந்தை அவர்கள் ஆய்ந்து தெளிந்து எழுதிய “இராவணகாவியம்“ என்ற இராவணகாதை இன்றும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கிறது. காலங்காலமாக எமக்கு கற்பிக்கப்பட்டுவந்த இராமயணமே எம்மனதுள் விரவிக்கிடக்கிறது.


2016ம் ஆண்டு கம்பன் செய்த தமிழ் இன வஞ்சத்தை “கம்பன்கொன்ற இராவணன்“ என்ற தலைப்பில் மரபு வழிக் கூத்தாக எழுதி இயக்கி மேடையேற்றியிருந்தேன். அது பல இராம பக்தர்களின் கடுஞ்சொல்லைத்தாங்கி  என்னைத் தொட்டு தழுவிச்சென்றது. அக்கூத்தானது மூன்றாவது களமாக Mönchengladbach தமிழாலய மாணவர்களின் வெளிப்பாடாக அரங்கேறியது.

அதன்பின் “இராவண காவியத்தில்“  “இராவணன் அவை“ என்ற பகுதியை கூத்தாக்கி வெளியிட்டிருந்தேன். அக்கூத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த எமது  Frankfurt தமிழாலய மாணவச் செல்வங்கள் மிக நேர்த்தியாகவும் மிக அழகான சொல்லிய பலுக்கலுடனும் பாடி கூத்தியல் மரபுக்கமைய வெளிப்படுத்திய நடிப்பின் சிறப்பு பலரின் பாராட்டைப்பெற்றது.

அக்கூத்தில்

1. இடினுஷன்  கௌசல்யா      இராவணன்

2. கனிஸ்ரிகன்  திருமால்      கும்பகர்ணன்

3. இடிலக்‌ஷியா கௌசல்யா  காமவல்லி

4. சாரா  முரளிதரன்      கட்டியங்காரர்

5. சந்தீவ்  சிவனேஸ்வரன்      வீடணன்

6. சகீரன்  சற்குருபரன்      சேயொன்

7. கஜானன்  திருமால்               தூதுவன்

8. விதுரா  சற்குருபரன்      வண்டார்க்குழலி

9. நவீன்  ஆனந்தராஜா     வீரன்

10. இறதுசி   தயாபரன்     சீதை

 ஆகியோர் மிகச் சிறப்பாக தம் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வளர்ந்துவரும் அக்கலைஞர்களை மனநெகிழ்வோடு பாராட்டுகிறேன்.

நன்றி – தியான்-














கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.