இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!!

 ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, 120 இந்திய இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


குறித்த இராணுவ வீரர்கள், இந்திய விமானப்படையின் IL-76 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (திங்கட்கிழமை) வந்தடைந்துள்ளனர்.
அந்தவகையில் இன்று தியத்தலாவில் ஆரம்பமாகவுள்ள குறித்த கூட்டுப்பயிற்சி, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இந்திய- இலங்கை இராணுவத்தினர் இணைந்து வருடந்தோரும் நடத்தும் இந்த கூட்டுப்பயிற்சி, ஆறாவது கட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.