கீர்த்தி சுரேஷ் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்!
பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள படத்திற்கு இசையமைக்க தேவி ஸ்ரீபிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மைக்காலமாக அடுக்கடுக்காக தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடித்து தமிழில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்றது. இதே படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பாலிவுட் உள்பட பல துறைகளிலிருந்தும் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. பாலிவுட்டில் ஹைதராபாத் ப்ளூஸ், பாம்பே டூ பேங்காக் உள்ளிட்ட படங்களை இயக்கிய நாகேஷ் குக்குநூர் கீர்த்தி சுரேஷுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இப்படம் கமர்ஷியல் ரீதியாக உருவாக்கப்பட்டு வருகிறது. கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற இசையமைப்பாளராக தேவி ஸ்ரீபிரசாத் தெரிந்ததால் அவரை படக்குழு தேர்வு செய்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் கடைசியாக இசையமைத்த ‘ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன்’ படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் ஹிட் ஆனது. அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் மகரிஷி படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இதுபோக ஆறு படங்களில் தேவி ஸ்ரீபிரசாத் பணிபுரிந்து வருகிறார். தமிழில் கடைசியாக சாமி 2 படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திலும் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை