மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேண்டும்!!

மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வரை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை இல்லாமல் செய்வது கடினமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குமுதினி விதானகே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,


“நாம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேற்கொள்ள பல்வேறு முயற்சிகளை சட்ட ரீதியாக மேற்கொண்டோம். ஆனால் அதில் எந்ததொரு முன்னேற்றமும் இருக்கவில்லை.
ஆகையால் தனிநபர் ஒவ்வொருவரதும் மனதிலும் முதலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
இதேவேளை கடந்த காலங்களில் அரங்கேறிய திகன சம்பவம் மற்றும் வடக்கு கிழக்கு யுத்தம் ஆகியன மீண்டும் ஏற்படக்கூடாதென சகலரும் ஏற்றுக் கொண்டனர்.
குறித்த சம்பவங்கள் அத்தகைய சந்தர்ப்பத்திலேயே தீர்வாக அமையுமே தவிர நிரந்தர தீர்வாக அமையாது.
ஆகையால் நிரந்தர தீர்வை வழங்குவதற்கு மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குமுதினி விதானகே தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.