மைத்திரிக்கு காதல் கடிதம் எழுதினாராம் சம்பந்தன்!


கேப்பாப்புலவில் இராணுவத்தினரின் பிடியிலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பொதுமக்களிற்கு சொந்தமான 70 ஏக்கர் காணிகள் கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ளது என்னும், அவற்றை விடுவிக்க வேண்டுமென்றும் வலயுறுத்தியுள்ளார்.
மேலும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களானவை,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, அது தொடர்பாக தங்களோடு கலந்துரையாடியுமுள்ளேன்.
இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடனும் ஆயுதப் படை அதிகாரிகளுடனும் நான் தொடர்பு கொண்டு எடுத்தியம்பியுள்ளேன்.
இக்காணிகள் விடுவிக்கப்படுமென நீங்கள் உறுதிமொழி வழங்கினீர்கள். இது, ஆயுதப்படையினர் வசமுள்ள, புலம்பெயர்ந்த தமிழ் குடிமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் அனைத்தும் 2018 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்ற தங்களுடைய கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவானதாகும்.
கேப்பாப்பிலவிலுள்ள 70 ஏக்கர் பரப்புக் கொண்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இக்காணிகள் இப்புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலம் சொந்தமாகவிருந்ததோடு, அவர்கள் அதில் தங்கி வாழ்ந்து தமது சமூக,கலாசார மற்றும் சமய நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தியும் வந்தனர். இக்கணிகள்மீதுஅவர்களுக்குப்பெரும் பற்றுதல் உண்டு.
தமது இக்காணிகள் தமக்கு ஒப்படைக்கப்பட வேண்டுமெனக் கோரிஅவர்கள் 2017 மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் (இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக) இக்காணிகள் முன்னே தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயுதப் படையினர் ஒத்துழைத்து கேப்பாப்பிலவிலுள்ள கணிசமானளவு காணிகளை விடுவித்துள்ளனர். எனினும்,ஏறத்தாழ 70 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படாதுள்ளது.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக தேவைப்படின், பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தக்கூடிய போதுமான அரச காணிகள் இக்காணிகளுக்கு அருகாமையில் உள்ளன. அவர்கள் அவ்வரச காணிகளுக்குச் சென்றால், இத்தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்காக இழப்பீடு செலுத்த வேண்டிய தேவை எதுவும் இராது.
இப்புலம்பெயர் தமிழ் மக்கள் இக்காணிகள் மீது மட்டற்ற பற்று கொண்டுள்ளனர். எனவே தமது அக்காணிகளைத் திரும்பப் பெறுவதில் அவர்கள் உறுதி பூண்டுள்ளனர். குறிப்பாக இக் காணிகளை விடுவிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ஒரு பெரும் முன்னெடுப்பாக அமையும்.
தனியார் காணிகளை விடுவிப்பதை சாதகமான முறையில் பரிசீலிக்க தாங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இக்காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென தாங்கள் தீர்மானமொன்று மேற்கொள்ள வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.