மன்­னா­ரில் இந்து ஆல­யம் மீது தாக்­கு­தல்!


மன்­னார் மாவட்­டத்­தில் திரு­கே­தீச்சர ஆலய அலங்­கார நுழை­வா­யில் உடைக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யில் மீண்­டும் இந்து ஆலய சிலை உடைக்­கப்­பட்­டமை பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மாந்தை மேற்கு பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட வெள்­ளாங்­கு­ளம் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த அம்­மன் ஆல­யத்­தின் சிலையே உடைக்­கப்­பட்டு வீதி­யில் வீசப்­பட்­டுள்­ளது.

சிவ­ராத்­தி­ரிக்கு முதல் நாள், மன்­னார் திரு­கே­தீச்­வர ஆல­யத்­தின் அலங்­கார நுழை­வா­யில் கிறிஸ்­தவ மக்­க­ளால் உடைக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் மன்­னா­ரில் மதப் பதற்­றத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது. இது தொடர்­பாக நீதி­மன்­றில் வழக்­கும் நடை­பெற்று வரு­கின்­றது.

இந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு அம்­மன் ஆல­யத்­தி­லி­ருந்த சிலை அடித்து உடைக்­கப்­பட்டு வீதி­யில் போடப்­பட்­டுள்­ளது. மன்­னா­ரி­லுள்ள இந்து மக்­களை இந்­தச் சம்­ப­வம் புண்­ப­டுத்­தி­யுள்­ளது. யாரால் உடைக்­கப்­பட்­டது என்­பது இது­வரை தெரி­ய­வில்லை என்று கிராம மக்­கள் தெரி­வித்­த­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.