வவுனியாவில் புதையல் கடத்த முற்பட்ட நால்வர் கைது!


வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊஞ்சல்கட்டு பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இவர்கள்,  ஊஞ்சல்கட்டு காட்டுப்பகுதியில் பெக்கோ மூலம் புதையல் தோண்டியுள்ளனர். இதன்போது பழைய காலத்து புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு போன்ற பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

 கைப்பற்றிய பொருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்டபோதே, புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேனி பகுதிகளைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின்னர், அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.