நாடளாவிய ரீதியில் தாதியர்கள் சுகயீன போராட்டம்!!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம், இன்று காலை 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதாக அரச சேவை இணைந்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர் எதிர்நோக்கும் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சு கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதாக கூறியே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை நாளை வரை நடத்தவுள்ளதாக அரச சேவை இணைந்த தாதியர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.