கனடா ஒட்டாவா மோதலில்20 வயதான இளைஞன் உயிரிழப்பு!

ஒட்டாவாவில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டாவாவின் டயஸ் சாலை 900 தொகுதி பகுதியில் (சனிக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் தொடர்பாக தகவலறிந்த பொது மக்கள் உடனடியாக 613-236-1222 ext. 2666 or Crime Stoppers at 1-800-222-8477 (TIPS) என்ற இலக்கத்திற்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.