பேரழிவை நினைவுகூருகிறது ஜப்பான்!!
ஜப்பான், வலிகளின் அனுபவங்களுடன் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட நாடாக இருந்தாலும், மீண்டெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று தனது துன்பங்களை சிறிது காலத்தில் ஈடு செய்யும் தன்மையை கொண்டுள்ளது.
நற்பண்புகளுக்கு இலக்கணமாகவும், விடா முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கும் ஜப்பான் அடிக்கடி சுனாமி அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது.
இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டுகளை தாங்கிய ஃபுகுஷிமா நகரம் மீண்டும் ஒரு அணு கதிரியக்க தாக்கத்தை எதிர்கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஜப்பான் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய 2011 ஆண்டு சுனாமி மற்றும் அணுசக்தி பேரழிவின் எட்டாம் வருட நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2011ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் பரிமாணத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் ஜப்பானில் மிகப்பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.
வெறுமனே 6 நிமிடங்கள் தொடர்ந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் உட்பட 373 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்களை உலுக்கியது. கரையோரங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், இருப்பிடங்கள் தரைமட்டமாகியதுடன், கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
அரை மணித்தியாலத்துக்குள் சுமார் 40 மீற்றர் வரை உயர்ந்த சுனாமி பேரலைகள் 3 புகுஷிமா டாய்ச்சி அணு உலைகளைத் தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தன.
சுனாமி அனர்த்தத்தில் சிக்கி சுமார் 15,000 பேர் வரை உயிரிழந்ததோடு, சுமார் 160,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்தனர்.
குறிப்பாக அணு உலைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு அவற்றில் இருந்து வௌிவரும் கதிரியக்கம் பிரதேசவாசிகளை பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாக்கியது.
அதன்பின்னர் ஏற்பட்ட சிறு அதிர்வுகள் மக்களை இன்னும் பீதிக்கு உள்ளாக்கியது. ஃபுகுஷிமாவில் இருந்த மின்சாரத்திற்கான அணுஉலைகளில் 3 ரியெக்டர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அதனைச் சுற்றி 20 கிலோமீற்றர் தொலைவில் வசித்த பொதுமக்கள் வௌியேற்றப்பட்டனர்.
ரெப்கோ எனப்படும் ரோக்கியோ இலெக்ரிட் பவர் கம்பனியால் நிர்வகிக்கப்படும் குறித்த அணு உலைகள் பாதிப்படைந்ததை அடுத்து மீண்டும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் மீளமைக்கப்பட்டது.
இந்தநிலையில், அனர்த்தம் நிகழ்ந்து 8 ஆண்டுகளின் பின்னர் அதன் துன்பியலை நினைவுகூரும் விதமாக ஜப்பானில் பிராத்தனை மற்றும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தநிகழ்வுகளில் ஜப்பானின் இளவரசர் அக்கிஷியோ மற்றும் இளவரசி கிகோ ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை