சோனியாவின் அமைதி உணர்த்துவது என்ன?

சோனியாவிடம் ஒரு மயான அமைதி நிலவுவதை? முலாயம்சிங் மோடியை மரியாதை நிமித்தமாக வாழ்த்தியபோது கூட, கோபமோ,  பழைய மிடுக்கோ, கட்சித் தலைவி என்ற அதிகாரப் பார்வையோ இன்றி ஒருவித பயம் கலந்த பதட்டத்துடன் தான் முகத்தை வைத்திருந்தார்.


உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்பதால் பிரசாரத்திற்கு தீவிரமாக வரவில்லை என்றாலும், மோடி தலைமையிலான சர்க்கார் மீது தீவிரமான அறிக்கைகளை கொடுத்திருக்கலாம். யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுப்பது தானே? அதாவது எதிர்ப்பினை ஏதாவதொரு வழியில் காட்டியிருக்க வேண்டும். அதைக் கூடசெய்யவில்லை.

சோனியாவுக்கு தன் குடும்பம் மற்றும் கட்சியின் அந்திம காலம் என்பது தீர்க்கமாகத் தெரிந்துவிட்டது. மகனையும் மகளையும் அழைத்து எச்சரித்திருப்பார். சுற்றிலும்

வளைக்கப்பட்டு விட்டோம். போதும் சரணடைந்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கலாம்.

ஆனால், அப்படிச் சொன்னதன் ஆழம், ப.சி, மல்லிகார்ஜுன் கார்கே, கமல்நாத், திக்விஜய் சிங் உட்பட பெருந்தலைகளுக்குப் புரிந்தது நிச்சயம் ராகுலுக்கோ பிரியங்காவுக்கோ புரிந்திருக்கப் போவதில்லை.

மகன் மகளிடம் முழுமையாக உடைத்துச் சொன்னால் பயத்தில் நொறுங்கிப் போய்விடுவார்கள் என்ற கவலையாக இருக்கலாம். அல்லது நாளை விசாரணை என்று வந்தால், பெரும் தலைகள் போல இவர்களால் சமாளிக்கத் தெரியாது என்பதாலும் கூட இருக்கலாம்.



போஃபர்ஸ் ஊழல் தொடக்கம், ஏர்செல் மாக்ஸிஸ், 2ஜி, மற்ற ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் வாங்கியது, காமன்வெல்த் கேம் ஊழல், நிலக்கரி ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், பார்டிஸிபேட்டரி நோட்டீஸ் ஊழல் உட்பட எல்லா ஊழல்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணம் வரை தற்போதைய  மோடி அரசு சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டே வருவது, வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ சோனியாவுக்கும் அவரது சீனியர் பரிவாரங்களுக்கும் நிச்சயம் தெரியும்.

அதனால் தான் டிமானிடேசேஷன் நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதீதமாகப் பதட்டப்பட்டார்கள். குறிப்பாக சிதம்பரம் மற்றும் அவரது குடும்பம் வளைக்கப்பட்டதும் சோனியாவுக்கு சர்வ நாடியும் அடங்கிவிட்டது.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் எந்த சீனியர் லீடரையும் சோனியா பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ராஜஸ்தானில் ராகுலின் அத்தனை பிடிவாதத்தையும் தாண்டி ராஜேஷ் பைலட்டுக்கு கொடுக்காமல் அஷோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவி கொடுத்தது, கமல்நாத்திற்கு முதல்வர் பதவி கொடுத்து வாயை அடைத்தது, சிதம்பரத்திற்காக கோர்ட்டில் முழு மூச்சாக வேலை செய்வது, மல்லிகார்ஜுனா கர்நாடக லோக்பாலில் சிக்கியதற்கு பதறுவது எல்லாம்,  “ மவளே நான் சிக்கினேன் என்றால், எந்தத் தயக்கமும் இல்லாமல் உன் மொத்த கதையையும் எடுத்து விட்டுடுவேன்” என்ற மிரட்டல்கள் தான் காரணம்.

சோனியாவின் கைத்தடிகளான, அம்பிகா சோனி, ஷீலா தீட்சித், ரேணுகா சௌத்ரிகள்கூட பாஜகவிற்கு எதிராக அறிக்கை விடுவதை சுத்தமாக விட்டுவிட்டார்கள்.

சோனியா கடைசி முயற்சியாக, தான் உதவி செய்த இத்தாலி நிழல் உலக உதவியைக் கோரிப் பார்த்திருப்பார். மோடியின் இன்றைய உலகளாவிய விஸ்வரூபத்தில் அந்தப் பக்கமிருந்து ஒரு உதவியும் எட்டிப் பார்க்கவில்லை அல்லது அந்த நிழல் உலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்னவோ? வேறு வழியில்லாமல், சீனா, பாகிஸ்தான் அளவுக்குக் கூட இறங்கி உதவி கோரிப் பார்த்து கொண்டிருக்கிறார்.

இந்தத் தேர்தல் முடிவுகள், நிச்சயம் காங்கிரஸுக்கு துளியும் சாதகமாக அமையாது என்று காங்கிரஸின் மேல்மாடிக்கு உறுதியாகத் தெரியும். இவர்களின் கடைசி வாய்ப்பாகக் காத்திருப்பது,  பாஜகவுக்கு சாதகமாக அமையாத ஒரு தேர்தல் முடிவு மட்டும் தான்.



ஆம் ஒருவேளை  தொங்கு பாராளுமன்றம் அமைந்தால்,  காங்கிரஸ், தான் இத்தனை காலம் சம்பாதித்த பணம், அதிகாரம், பிற சக்திகள் அத்தனையும் மொத்தமாகத் திரட்டி மோடியை ஆட்சியில் அமராமல் பார்த்துக் கொள்ளும். ஏன் பாஜக ஜெயித்தாலும், மோடி மட்டும் பிரதமராக வராமல் இருக்க எந்த மட்டத்திலும் இறங்கத் தயாராக இருக்கும்.

அதுவரை, சோனியா உட்பட அத்தனை ஊழல்வாதிகளும் மரண பயத்தில் தான் இருப்பார்கள். ஆனால், அப்படியொரு தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.