மட்டக்களப்பில் இராணுவ குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்க நடவடிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட 39 வீடுகள், எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்த்திகா ஜயவர்த்தன தெரிவித்தார்.


ரணவிரு சேவா சங்கத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்படவுள்ளவர்களுக்கான கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி.அப்துல் வஹாப், ரணவிரு சேவா அதிகாரசபையின் உறுப்பினர்கள், இராணுவ பயனாளிக் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ரணவிரு சேவா’ பயனாளிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 39 குடும்பங்களுக்கும்,  தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில் நடைபெறவுள்ள திறப்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்கவுள்ளனர்.
அன்றைய தினம் 500 இராணுவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்த்திகா ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.