வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உதவித் திட்டம் !!
மூதூர் கிழக்கில் பாட்டாளிபுரம் வீரமாநகர் இளக்கந்தை போன்ற கிராமங்களைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட எட்டுக் குடும்பங்களுக்கு கோழி வளர்ப்பில் ஈடுபடுவதற்கான உதவித்திட்டத்தை வழங்குமாறு மருதம் சனசமூக நிலையம் வீரமாநகர் இனால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் திரு கண்ணன் அவர்களினால் முதற்கட்டமாக இவர்களுக்கான கோழிக்கூடுகள் வழங்கப்பட்டதுடன் இன்று இவர்களுக்கு முட்டையிடும் நிலையிலுள்ள கோழிகள் மற்றும் கோழிவளர்ப்பிற்கான உபகரணங்கள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டங்களில் முழுமையாகவும் நிறைவாகவும் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீராமநாதன் (கண்ணன்)மற்றும் திரு கு.குகன் ,பிரதேசசபபை உறுப்பினர் கரன் தளிர்கள் அமைப்பின் இணைப்பாளர் சின்னக்கிளி போன்றோருடன் கிராமிய அமைப்புக்களின் பிரதி நிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo




.jpeg
)





கருத்துகள் இல்லை