மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல்.!

இனத்திற்காக நீதி கோரி அணிதிரளுமாறு அழைப்பு

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்பவை இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன . அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனச் சுத்திகரிப்பாகவே உள்ளது . அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே  இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் வாழத் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு , போர்க்குற்ற மீறல்கள் , மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களிற்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களிற்கு பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் - எழுச்சிப் போராட்டங்களினனை முன்னெடுக்க வேண்டும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015ல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிய நிலையிலும் ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது . இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது .
இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்றினை எதிர் வரும் 16.03.2019 அன்று முன்னெடுக்க தீர்மானத்துள்ளோம் .
எனவே நீதி கோரி ! இடம்பெற இருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் பேசும் மக்களினை அலைகடலென திரட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு பொது அமைப்புகள் ! மற்றும் மதகுருமாரை வேண்டிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.