ஆட்சி மாற்றத்திற்கான சூழல் நிலவுகிறது-வைகோ!!

மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் நிலவுவதாக மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவின் மதசார்பற்ற கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தின் போது அதை உணரமுடிகிறது. கடந்த தேர்தலில் பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் கூட்டத்தை தற்போது காணமுடிகிறது. மத்தியில் மட்டுமல்ல மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் தான் நிலவுகிறது என கூறினார்.
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்தோடு செயல்படுகிறதா என்ற கேள்விக்கு, அப்படியான புகார்கள் வருகிறது. அதற்கு தேர்தல் ஆணையம்  தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.   

No comments

Powered by Blogger.