வவுனியா குளவிசுட்டான் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஒரு குடும்பத்திற்க்கு வாழ்வாதார உதவி!!
வவுனியா வடக்கு குளவிசுட்டான் வேலன்குளத்தில் வசித்து வரும் செல்லத்துரை கனகரத்தினம்,கனகரத்தினம் தவமணியம்மா ஆகிய வயதான கணவனும் மனைவியும் இறுதி யுத்தத்தில் தமது இரண்டு பிள்ளைகளை தொலைத்துவிட்டு அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்ற ஏக்கம் ஒருபுறம் வயதான காலத்தில் வாழ்வதற்காக போராடும் நிலை மறுபுறம் என நாளாந்த வாழ்க்கை போராட்டமிகுந்ததாகவே சென்று கொண்டிருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சகல போராட்டங்களிலும் கலந்து கொள்ளும் தவமணியம்மா தனது இரண்டு பிள்ளைகளையும் இராணுவத்திடம் ஒப்படைத்ததாக சாட்சியமளிக்கின்றார்.

தமது பொருளாதார சுமையிலும் தாய் தந்தையில்லாத(பிறந்த அன்றே தாய் இறந்து போனதாகவும் தந்தை அன்றையதினமே சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்) ஒரு பெண்பிள்ளையையும் பராமரித்து வருகிறார்.

தமது நாளாந்த செலவிற்காக ஒரு பெட்டிக்கடை ஒன்றை நடாத்தி வந்த தவமணியம்மா அதனை தொடர்ந்து நடாத்த முடியாமல் அக்கடையை மூடிய நிலையில் எமது செயற்பாட்டாளர் நண்பர் கேசவனது முயற்சியால் தவமணியம்மாவின் பெட்டிக்கடை மீளத்திறக்கப்பட்டு அக்கடைக்கு தேவையான ஐம்பதாயிரம் பெறுமதியான அன்றாட விற்பனைப்பொருட்கள் நேற்றையதினம் வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முண்ணனியால் வழங்கப்பட்டது.

ஆனிமாதம் இல்லற இணையேற்பில் இணைந்து கொள்ளும் ரமணன்-லாவன்யா (ஜேர்மன்) தம்பதிகளின் நிதி உதவியை ஒழுங்குபடுத்தி அதனை இக்குடும்பத்திற்கு பொருட்களாக வழங்கி உதவிய யாழ்ப்பாணம் கரவெட்டியின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிச்செயற்பாட்டாளர் தம்பி தம்பன் மற்றும் இக்குடும்பத்திற்கு உதவி கிடைக்க வழிசமைத்த முன்னணியின் வவுனியா மாவட்ட பொருளாளர் நண்பன் கேசவன், இவ் உதவிக்கு எம்முடன் தோள் கொடுத்த வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினர் திரு.தி.விஜீகரன்,நண்பர் செந்தில்குமரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
எமது அடுத்த பணியும் முயற்சியும் தவமணியம்மா குடும்பத்தின் உடைந்த இக்கடையை திருத்துவதும் ஆதரவற்று இக்குடும்பத்தால் பராமரிக்கப்படும் தரம்-9இல் கல்வி கற்கும் சிறுமிக்கு ஒரு துவிச்சக்கரவண்டி பெற்றுக்கொடுப்பதுமேயாகும். உதவக்கூடியவர்கள் நேரடியாகவோ வவுனியா மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிச்செயற்பாட்டாளர்களி ஊடாகவோ கரம் கோருங்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை