அபிவிருத்தி அரசியலில் அபிவிருத்தி பற்றி கவனம் செலுத்த வேண்டியது பெண் தலைமைத்துவ குடும்பங்கள்!!
40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 23 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த பெண்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்குக் குறைந்தவர்கள்
அதாவது வடக்கு கிழக்கில் 100000 இற்கும் அதிகமான பெண் தலைமைத்துவ குடுமபங்கள் இருக்கிறது . இத்தகைய பெண் தலைமைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை மிக மோசமாக இருக்கிறது. இந்த குடும்பங்களில் மாணவர் இடைவிலகல் , சிறுவர் தொழிலாளிகள் என்பன அதிகமாக இருக்கிறது .
இவர்களை முன்னிறுத்தி செய்ய வேண்டிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றைக்கு அவசியமாக இருக்கிறது .ஆனால் யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை
தமிழ் மக்களின் பாராளமன்ற தலைமைத்துவமாக இருக்கிற தமிழரசு கட்சியின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டு இருந்தது .
"வடகிழக்கில் கிட்டத்தட்ட 90,000 விதைவகள் இருக்கிறார்கள் . அவர்கள் திறனை வளர்க்கவும், வாழவதாரத்தை உயர்த்தவும் ஒரு தெளிவான கொள்கை தேவை. இந்த விதவைகள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியில் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் மாறியுள்ளனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் தேவையான ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்படும்"
இன்றுவரை தமிழரசு கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்ன படி இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக என்ன செய்து இருக்கிறது ?
கடந்த ஆண்டு Budget இற்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களித்தது .அந்த Budget இல் பெண் தலைமைத்துவ பெண்களுக்கு வீடமைப்பதற்கு 270 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு இருந்தது ..
இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது என கேட்டால் யாரும் பதில் சொல்ல முடியாது
உள்ளூர் சிறுவீதிகளுக்கு கல்லு போடுதல் , விளக்கு பூட்டுதல் , கோவிலுக்கு காசு கொடுத்தல் ,சனசமூகங்களுக்கு காசு கொடுத்தல் , விளையாட்டு கழகங்களுக்கு காசு கொடுத்தல் தான் இப்போது அபிவிருத்தி என சொல்லுகிறார்கள்
ஆனால் உண்மையில் அரசியல் கடந்து பொருளாதாரம் பற்றியும் அபிவிருத்தி பற்றியும் அக்கறைப்படுபவர்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய விடயம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்


.jpeg
)





கருத்துகள் இல்லை