யாழ் கொடிகாமத்தில் பொலிஸாா் ஆதரவுடன் போலி நிதி நிறுவனத்தை நடாத்தும் மோசடி கும்பல்!

யாழ் கொடிகாமம் பகுதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக  இயங்கிவரும் W.S.D (work shop development) நிறுவனம் மக்களுடைய வீடுகளுக்குள் சென்று வேலை சேகாிப்பு திட்டம் என்கின்ற பெயாில் மோசடிகளை ஆரம்பித்திருந்தது. இதற்கமைவாக இவ் பகுதியை சோ்ந்த சில வறிய குடும்பங்களில் உள்ள பெண்களை 20 ஆயிரம் ரூபாய் மாதாந்த ஊதியம் என ஆசை காட்டி வேலையில் சோ்த்துள்ளார்கள். இவர்களளின் ஊடாக ஊருக்குள் சென்று மக்களுக்கு பண ஆசைகளை காட்டி அந்தப் பெண்களை பயன்படுத்தி மக்களிடம் பணம் திட்டியுள்ளது.

எனினும் குறித்த பெண்களுக்கு பேசப்பட்ட ஊதியம் வழங்கப்படாததுடன், ஊதியத்தை கேட்கும்போதெல்லாம் அவா்களை மிகமோசமாக அச்சுறுத்தியதுடன், காலத்தை இழுத்தடித்து வந்த நிலையான பின்னர்  அந்த பெண்கள் வேலையிலிருந்து நின்றுவிட்டர்கள்.

பின்னா் தாமாகவே மக்களிடம் சென்று பணத்தை வாங்கியுள்ளனா் இவ்வா று சுமாா் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு குறித்த மோச டி கும்பல் நதமது மோசடி நிறுவனத்தை மூடிவிட்டு தப்பி ஓடியுள்ளனா். இந் நிலையில் பணம் கொடுத்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தபோதும் இதுவரை ஆக்கபூா்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவி ல்லை. என பாதிக்கப்பட்ட மக்கள் விமசனம் தெரிவித்துள்ளார்கள்.

No comments

Powered by Blogger.