மதுபான நிலையத்திற்கு பாடசாலை ஆலயநிர்வாகம் சம்மதமா!! அரச அதிபர் வருத்தம்!!
ஓமந்தையிலுள்ள பாடசாலை உட்பட ஆறு அமைப்புக்கள் சம்மதக்கடிதங்கள் வழங்கியமை காரணமாகவே மதுவரித்திணைக்களத்தினால் ஓமந்தையில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாட்டினால் நான் மிகவும் மனவேதனையடைகின்றேன். இவ்வாறு இன்று முற்பகல் வவுனியா மாவட்ட செலயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அம்மாச்சி உணவகம், ஓமந்தைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தமிழ் தெற்கு பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமார் ஓமந்தை பொலிசார், பொது அமைப்புக்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலின்போது அரசாங்க அதிபர் தெரிவிக்கும்போது,
மதுவரித்திணைக்களத்தினால் சட்டபூர்வமாக ஓமந்தைப்பகுதியில் அனுமதியளிக்கப்பட்டு மதுபான விற்பனை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கசிப்பு கஞ்சா நடவடிக்கையினைக்கட்டுப்படுத்த மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு சம்மதக்கடிதங்கள் பாடசாலை உட்பட ஆலயம் கிராம அமைப்புக்கள் என ஆறு அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான் வேற்று மதத்தினை வழிபட்டுவருபவன் மதுபானம் அருந்துபவனல்ல இவ்வாறு சம்மதக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கும் சம்பவங்களாகவே என்னால் கருத முடிகின்றதாக அரசாங்க அதிபர் மக்கள் பிரதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதிக்கு அமைக்கப்பட்ட புகையிரத வேலி புகையிரத திணைக்களத்தினால் அகற்றப்பட்டுள்ளதுடன் பாதைபோக்குவரத்து மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள விவசாயிகளின் காலபோக நெல் அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன எனவே அப்பாதையூடாக போக்குவரத்து மேற்கொள்வதற்கு விவசாயிகள் பெரிதும் துன்பங்களை அனுபவித்து வருகின்றதையடுத்து தற்காலிகமாக அப்பாதைக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளை அகற்றி பொலிசார் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்க அதிபர் புகையிரதத்திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளதாக இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை