கோலாகலமாய் ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பு!
இந்தியாவின் தனவந்தரும், வர்த்தக பிரமுகருமான முகேஷ் அம்பானியின் புதல்வரின் திருமண வரவேற்பு நிகழ்வு மும்பையில் கோலாகலமாக இடம்பெற்றது.
மும்பையில் திருவிழா போன்று கலைகட்டிய இந்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றதுடன், பிரபல சினிமா நட்சத்திரங்களும், பொலிவுட் சினிமா சார்ந்த முக்கியத்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேஹ்டா இந்தியாவின் பாரம்பரிய குர்தா மற்றும் லெஹங்கா ஆடை அலங்காரங்களுடன் வலம் வந்தனர். அத்துடன் தன்னார்வ ஔிப்படக் கலைஞர்களுக்கும் முன்னிலையாகியிருந்தனர்.
இந்தநிலையில், பொலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் மற்றும் அவரது புதல்வி சுவேத்தா பச்சன் நந்தா, கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது பாரியார் அஞ்சலி டெண்டுல்கர், அக்ஷெய் குமார் மற்றும் அவரது டுவிங்கல் கண்ணா மற்றும் பழம்பெரும் நடிகை ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரன் ஜோஹார் மற்றும் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சம் மற்றும் புதல்வி ஆராத்யா ஆகியோரும் ஔிப்படங்களுக்கு முன்னிலையாகினர்.
28 வயதான மணமகன் ஆகாஷ், வைர வியாபாரியான ரசல் மேத்தாவின் புதல்வி ஷ்லோகா மேஹ்டா ஆகியோரின் திருமண நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது.
திருமண அழைப்பிதழ் முதல் நன்றி நவிழல் அட்டை வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைந்திருந்த இந்த திருமண நிகழ்வில் பல முன்னணி வர்த்தக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
முகேஷ் அம்பானி இந்தியாவின் வர்த்தக பெரும்புள்ளியாக திகழ்வதுடன், எரிபொருள், எரிவாயு, தொலைத்தொடர்பு மற்றும் பல வர்த்தக துறைகளில் கோலோச்சுகிறார். ஆசியாவில் முதல் தரத்திலும், உலகின் 13 வது இடத்திலும் உள்ள தனவந்தராக ஃபோப்ஸ் சஞ்சிகை அண்மையில் அறிவித்திருந்தது. அவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ 50 பில்லியன் டொலர்களாக கணிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)





கருத்துகள் இல்லை