விமானியை பதறவைத்த சம்பவம்!!

அவசரக் காலங்களில், அதாவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை, வெடி குண்டு மிரட்டல் போன்ற பல காரணங்களுக்காக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கப் பட்டதாக நாம் பல செய்திகளைக் கேட்டிருப்போம்.
ஆனால், சவுதியிலும் இப்படி ஒரு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம்தான் சற்று அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நேற்று முன்தினம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள கிங் அப்துல் அஸிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து SV832 2 என்ற எண்ணுடைய சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூர் நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அதில் பயணித்த பெண் ஒருவர் மிகவும் பதற்றத்துடன் விமானப் பணிப் பெண்ணிடம் வந்து `என் குழந்தையை விமான நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் மறந்துவிட்டுவிட்டேன். மீண்டும் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை விமானப் பணிப் பெண் விமானியிடம் கூற, அவர் விமானத்தை தரையிறக்குவதற்காக விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டுள்ளார். விமானி பேசும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ``இந்த விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கேட்கிறது. பயணி ஒருவர் காத்திருப்பு அறையில் தன் குழந்தையை விட்டுவிட்டார். இது மிகவும் வருத்தமான நிகழ்வு. கடவுள் நமக்குத் துணையிருப்பார். நாங்கள் மீண்டும் திரும்பலாமா” எனக் கேட்கிறார். அதற்கு விமான நிலைய அதிகாரிகள், ``சரி நீங்கள் மீண்டும் திரும்பி வாருங்கள். நமக்கு இது முற்றிலும் புதிதான ஒன்று” எனப் பதிலளித்தனர்.

தாயின் தவிப்பைப் புரிந்துகொண்டு விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு குழந்தை தன் தாயிடம் சேர்க்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.