நாடு பலமான நிலையில் உள்ளதாம் – பிரதமர் ரணில்!!

சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளமையால்தான் நாடு பலமான நிலையில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


மேலும், எதிரணியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கான ஆதரவை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமைசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசமைப்புச் சமைபயில் எமது வகிபாகம் சிறப்பான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில், உயர் பதவிக்கு நபரொருவரின் பெயரை முன்மொழிவது அல்லது முன்மொழிப்பட்ட நபர் அந்தப் பதவிக்கு தகுதியானவரா- இல்லையா என்பதை கூறுவதுதான் எமது கடப்பாடாகும்.

அமெரிக்கா போன்று ஊடகங்களை வைத்துக்கொண்டு இந்தச் செற்பாட்டை எம்மால் மேற்கொள்ள முடியாது. எவ்வாறாயினும், அனைத்து விடயங்களும் ஆலோசனைக்கு உட்பட்டே முடிவு செய்யப்படுகின்றன.

இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஆணைக்குழுவை சுயாதீனப்படுத்தியமையால் தான் இன்று போதைப்பொருளுக்கு எதிரான காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சக்தியால் தான் நாம் இத்தனை வருடங்கள் நாம் அரசாங்கத்தின் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இதனை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மக்கள் எம்முடன் தான் இருக்கிறார்கள். அபிவிருத்தி தொடர்பாக எதிர்த்தரப்பினர் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், அனைத்துவிதமான அபிவிருத்திகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 71 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் இவர்கள் அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகிறார்கள்“ என குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.