குளத்தில் மூழ்கி மாணவன் சாவு!!

மட்டக்களப்பு – செங்கலடி பதுளை வீதியில் தம்பானம்வெளி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஜெயராசா ஜனார்தனன் (வயது 11) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த குளத்தில் நீராடச் சென்ற அம்மாணவன் நீரில் மூழ்கியுள்ளார், இதனையடுத்து அங்கு விரைந்த அயலவர்கள் குறித்த மாணவனை மீட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காயன்குடா பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அப்பிரதேசத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்கள் குடிநீரின்றி பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றன.

குடிநீருக்காக இரண்டு குழாய் கிணறுகள் மாத்திரமே அங்கு அமைக்கப்பட்டுள்ளன. நீராடுவதற்கும் குறித்த குளத்தினையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.