புலிகளின் யுத்தத்தைவிட நிறுவனங்களே பயங்கரவாதிகள் – புத்திக பத்திரன

விடுதலை புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகள் என கைத்தொழில் வாணிபம் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 40 பேரே மரணித்துள்ளனர் ஆனால் புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கூறிய அவர், “இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதரத்துடன் நிரூபிப்பேன். இன்று சந்தைகளில் எல்லா உள்நாட்டு பால்மாக்களை மறைத்துவைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை மாத்திரம் மக்களின் நுகர்வோரின் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று சிறுவர்களின் இனிப்புப்பொருகள் வைத்திருக்கும் இடத்தில்தான் சிகரட் பெட்டிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 40 பேரே மரணித்துள்ளனர் ஆனால் புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர். இந்த நடவடிக்கைகளை நிறுத்த எமது நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளது” என அவர் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.