அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்ற முதல் இலங்கை தாதி பயணம்!

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.

இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த, றுவனி ரணசிங்ஹ என்பவரே இவ்வாறு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 3000 பேருக்கு  வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது.
அதன்படி 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு செல்லும் இலங்கை தாதியர்களுக்கு மாதாந்த சம்பளமாக, 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.