முன்னாள் போராளிக்கு மறுவாழ்வளித்த இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் செய்துவந்த முன்னாள் போராளிக்கு யாழ்.புனித பரியோவான் கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து வாழ்வாதார உதவி செய்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் போராளிக்கு உதவிய மாணவர்கள் தமது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் செய்து வந்த வெள்ளாங்குளத்தினைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு உதவி செய்துள்ளனர்.
அவரது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள சிறிய கடையொன்றினை மாணவர்கள் அமைத்துக்கொடுத்துள்ளனர்
கடைக்கான முழுமையான பொருட்களையும் மற்றும் இதர பொருட் கொள்வனவுக்குரிய பணத்தினை வழங்கியும் உதவி செய்துள்ளனர்
மேலும் குளிர்சாதனப்பெட்டி, மேசை, கதிரை, தராசு போன்ற பொருட்களை வழங்கியும் வாழ்வியல் மேம்பாட்டிற்கு காத்திரமான உதவிகளை வழங்கியுள்ளனர்.
வெள்ளாங்குளத்தினைச் சேர்ந்த குறித்த முன்னாள் போராளி மிக இளவயதிலேயே போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.
யுத்தத்தின்போது இராணுவ முற்றுகை ஒன்றிலிருந்து தப்பிக்கமுடியாமல், சரணடையக்கூடாது என்ற எண்ணத்தில் சயனைட் கடித்ததினால் பேச்சுத்திறனை இழந்துள்ளார்.
மேலும் நடக்க முடியாத நிலையில் எதுவித வருமானமும் இன்றி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.