ஈழத்தமிழன் லண்டன் வடமேற்கில் கத்தியால் வெட்டிப் படுகொலை!!(படங்கள்)

லண்டன் வடமேற்கு பினர்  (PINNER) மார்ஷ் வீதியில் இருக்கும் கடை ஒன்றில்    கத்திகுத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஈழத்தமிழரான ரவி என்பவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் லண்டன் காவல் துறை  மேலும் கருத்து  தெரிவிக்கையில் குறித்த கத்தி குத்தியதில்  படுகொலை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எனினும் எவரும் இதுவரைை கைது செய்யப்படவில்லை.

கத்திக்குத்துக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

லண்டனில் சமீப காலமாக கத்திக்குத்து கொலைகள் அதிகரித்து வருகின்றது. இந்த கொலையுடன்
சேர்த்து இந்த வருடத்தில் மாத்திரம் பிரித்தானியாவில் 29 கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.