ஈழத்தமிழருக்கு சாதகமாக தீர்ப்பளித்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம்!

பிரித்தானியாவில் அகதிதஞ்சம் நிராகரிக்கபட்ட ஈழத்தமிழருக்கு சாதகமாக பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவரின் மேன்முறையீட்டு மனுமீதாக வழக்கில் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியுள்ளது.
இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களால் ஏற்பட்ட காயங்கள் பெயர் குறிப்பிடப்படாத மேற்படி ஈழத்தமிழரின் உடலில் காணப்பட்டிருந்தன.
எனினும், சித்திரவதையால் ஏற்பட்ட இந்த காயங்கள் மேற்படி நபரால் சுயமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டை பிரித்தானியாவின் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த நபரின் புகலிட கோரிக்கை வழக்கு நிராகரிக்கபட்டிருந்தது. இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு மனுமீதாக வழக்கில் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் ஈழத்தமிழருக்கு சாதகமான தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்ப்பு தொடர்பில் சட்டத்தரணி கணநாதன் கருத்து தெரிவிக்கையில்,
“இந்தத் தீர்ப்பானது இவ்வாறான முறையில் புகலிட கோரிக்கை நிராகரிக்கபட்ட ஏனைய ஈழத்தமிழகளின் மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரியான தீர்ப்பாகும்” என கூறியுள்ளார்.
KV (Sri Lanka) (Appellant) v Secretary of State for the Home Department (Respondent)
[2019] UKSC 10 UKSC 2017/0124 KV (Sri Lanka) (Appellant) v Secretary of State for the Home Department (Respondent) On appeal from the Court of Appeal Civil Division (England and Wales) Please note the reporting restrictions on this case: THE COURT ORDERED that no one shall publish or reveal the name or address of the Appellant who is the subject of these proceedings or publish or reveal any information which would be likely to lead to the identification of the Appellant or of any member of his family in connection with these proceedings. The Appellant is a Sri Lankan national who claims that due to his association with the Tamil Tigers – the opposition during the civil war in Sri Lanka – he was detained by the Sri Lankan authorities between 2009 and 2011. He has scarring that he claims resulted from being beaten using hot metal rods whilst in detention. He came to the UK in 2011 and claimed asylum. The Respondent did not believe his account and rejected his claim for asylum. The issue is: What is the correct approach to the assessment of medical evidence in asylum claims alleging torture. The Supreme Court unanimously allows the appeal and remits KV’s appeal against the refusal of asylum to the Upper Tribunal for fresh Determination.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.