உறைந்த ஆற்றுக்கு வெடி வைக்கும் சீனர்கள்!

பனிக்காலத்தில் உறைந்து போயிருக்கும் ஆறுகள் கோடைக் காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் சிறிது சிறிதாக கரைந்து பெரும் வௌ்ளப் பெருக்கை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.


இதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு சீனாவின் ஹூமா கவுன்டியில் உள்ள ஹெலியோங்ஜியாங் ஆற்றில் நீண்ட தூரத்திற்கு வரிசையாக வெடி வைக்கப்பட்டு பனித் தட்டுகள் தகர்க்கப்படுகின்றன.

எதிர்வரும் வசந்த காலத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து செல்வதால் உறைந்துள்ள பனிப்படலத்தில் அளவுக்கு அதிகமான நீர் செறிந்திருக்கின்ற காரணத்தால் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

வெடி வைக்கப்பட்ட பகுதி ஆற்றின் சுமார் 2.7 கிலோமீற்றர் தொலைவைக் கொண்ட பகுதியாகும். இதன்போது வெடிபொருட்கள் பனித்தட்டுகளின் ஆழத்தில் புகைக்கப்படுகின்றன.

பணியாளர்கள் வரிசையாக வெடிப்பொருட்களை வெடிக்க வைத்த போது பனிப்பறைகள் வெடித்து காற்றில் பரவுகின்றன. அவை பாரிய தூண்களைப் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக அதிக வெப்பநிலை மற்றும் குளிர்காலநிலைகளை கருத்தில் கொண்டே உறைந்த ஆற்றுப்பகுதியில் இந்த காலகட்டத்தில் வெடி வைக்கப்பட்டதாகவும், 2.7 கிலோமீற்றர்களைக் கொண்ட செயற்றிட்ட பகுதி 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டும் வெடி வைக்கப்பட்டதாக ஹூமா கவுண்டியின் நீர்பாசன அதிகாரசபையின் பணிப்பாளர் லி யாங்சோங் தெரிவித்தார்.

அத்துடன் பனிப்பாறைகள் வெடிக்க வைக்கப்பட்ட காட்சிகளால் கவரப்பட்ட பல சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியில் ஒன்று கூடி ஔிப்படங்களை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர். பறக்கும் பனித் துகள்கள் அங்கு அழகிய மாயத்தை தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதுகுறித்து கருத்து வௌியிட்ட ஒரு சுற்றுலாப் பயணி, தான் மிகவும் அதிஷ்டகரமாக உணர்வதாகவும், இவ்வாறான ஒரு காட்சியை முன்னேப்போதும் கண்டதில்லை என்று கூறினார். அதேவேளை அபாயகரமான பகுதிகளுக்கு பொதுமக்கள் நுழைந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காக பொலிஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.