பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆளில்லா விமானம் அறிமுகம்!

பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆளில்லா விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


சீன நிறுவனம் ஒன்றினால் இந்த ஆளில்லா விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

FACC என்ற ஆஸ்திரிய விமானக் குழுமமும் Ehang சீன நிறுவனமும் இணைந்து இந்த விமானத்தை தயாரித்துள்ளன.

பயணிகள் செயலியின் உதவியுடன் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு ஆளில்லா விமானத்தில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆளில்லா விமானம் சந்தைக்கு வருவதற்கு முன்னர், பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என Ehang நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த ஆளில்லா விமானம் 250 கிலோகிராம் எடை வரை ஏற்றுச் செல்லக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.