இந்தியர்கள் உட்பட 100 பேர்மலேசியாவில் கைது!!

மலேசியாவில் சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் இரு இந்தியர்கள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா- கோலாலம்பூர், பேட்டலிங் ஜெயா என்ற பகுதியில், குடிவரவுத்துறை அதிகாரிகள்  நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின்போதே இரு இந்தியர்கள் உட்பட   சுமார் 100 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்கள் கைது செய்துள்ளனர்.
இதில் இரண்டு இந்தியர்கள்,  94 இந்தோனேசியர்கள், இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு கம்போடிய பெண்  ஆகியோர் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து  சிலாங்கூர் குடிவரவுத்துறையின் இயக்குனர் முகமது சுக்ரி நவி குறிப்பிடுகையில்,  “இந்த தேடுதல் நடவடிக்கையில் 76 அதிகாரிகள் ஈடுபட்டனர். பொதுவான முறைபாடுகளின் அடிப்படையிலும் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
கடந்த மார்ச் 31 ஆம் திகதி, அதிகாலை 12.45 மணிக்கு ஆரம்பமாகிய தேடுதல் நடவடிக்கை ,அன்றைய தினம்  பகல் 2.30 மணிக்கு நிறைவடைந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.