லிபியாவில் பதற்றம் பிரித்தானியா – பிரான்ஸ் கரிசனை!

பிரான்ஸ் சென்றுள்ள பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் வெஸ் லே ட்ரியானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


பிரான்ஸின் பிரிட்டனி பிராந்தியத்தில் ஜீ7 உச்சிமாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது, லிபியாவின் இராணுவ நடவடிக்கை குறித்து இரு அமைச்சர்களும் கரிசனை செலுத்தினர். குறிப்பாக கிழக்கு லிபிய இராணுவ தளபதி காலிஃபா ஹப்தர், தலைநகர் திரிப்போலியில் மேற்கொண்டுள்ள இராணுவ தலையீட்டை இரு அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

லிபியாவின் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற தன்மையானது, ஐரோப்பிய நாடுகளுக்கு தாக்கம் செலுத்துமென இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் குறிப்பிட்டனர். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டனர்.

இதேவேளை, லிபியாவின் தற்போதைய நிலை தொடர்பாக ஜீ7 நாடுகள் மிகுந்த கரிசனையுடன் அவதானித்து வருவதாக, மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் ஜெரமி ஹண்ட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.