வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய , வைத்திய சேவை உதவியாளர்கள் மற்றும் குறை நிரப்பு வைத்திய சேவையினரும் இணைந்து இன்று (08.04) காலை 8.30 மணி தொடக்கம் 24 மணிநேர இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இவ் இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6 வருடங்களாக தர உயர்வுகளை பெறவும் , தாதிய பட்டதாரிகள் சம்பளத்தை உத்தியோகரீதியான தொழிலுக்குரிய சம்பள அளவுத்திட்டத்தை பெறவும் , சம்பள முரண்பாட்டைத் தீர்க்க ஐனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையினை அமுல்படுத்தவும் , இழந்த பதவி நிலையை மீளப்பெறல் , ரூபா 3000 ஆகவுள்ள விஷேட படியை ரூபா 6000 ஆக உயர்த்துதல் , மேலதிக நேர கொடுப்பனவை 1/80 ஆக பெறவும் , மீதி மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல் , சுகாதார நிர்வாக சேவையினை உருவாக்குதல் ஆகிய கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் மற்றும் இரத்த சோதனை போன்ற சேவைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்மையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் நோயாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.