தண்ணீரை வீணாக்கும் அதிமுக!!
தஞ்சை மாவட்டம் தேனாம்படுகை கிராமமக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகையையொட்ட திருமலை ராஜன் ஆறு உள்ளது. கோடைகாலங்களில் ஆற்றில் தேங்கி உள்ள நீரை தான் மக்கள் பெரிதும் நம்பியிருக்கின்றனர். கால்நடைகளுக்கு குடிநீராகவும், அவற்றை குளிப்பாட்டவும், ஈம காரியங்கள் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சில தினங்களாக இப்பகுதியில் அதிமுகவை சேர்ந்த தாடி ரவி என்பவர் இதில் மீன்பிடிக்க குத்தகை எடுத்து உள்ளதாக கூறி குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன்பிடித்து வருகிறார். இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்வதற்கு விசைப்பம்புகளில் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். .
இதுகுறித்து காவல் நிலையத்திலும், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி டிராக்டர் முன்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரவியின் ஆதரவாளர்கள் அவர்களை மிரட்டியதால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவெடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை