பொலிஸ் தலைமையகத்தில் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு!!
பொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கட்டிடத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு…பொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் (10) மக்களின் பாவனைக்காக கையளித்ததோடு, நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை பார்வையிட்டார். பொலிஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை ஜனாதிபதி அவர்கள் நாட்டினார்.
அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, வசந்த சேனாநாயக்க வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.











.jpeg
)





கருத்துகள் இல்லை