துரோகி டக்கிளஸ் &விக்கிலீக்ஸ்!!

 விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டு இருக்கிறார் . உலகெங்கிலும் இருந்து அமெரிக்கா தூதுவர் அலுவலகங்கள் அமெரிக்காவின் வெளியுறவு அலுவலகத்தோடு பரிமாறிய தகவல்களை , ஆவணங்களை பகிரங்க படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானவர் .

இலங்கையை பொறுத்தவரை இலங்கை ராணுவம் , அரசியல்வாதிகள் , துணை ஆயுத குழுக்கள் பற்றிய தெளிவான தகவல்கள் இந்த ஆவணங்களில் வெளியாகி இருந்தன .

ஒரு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம்

2006-2009 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஈ.பி.டி.பி. இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து இயங்கி கடத்தல், நீதிக்கு புறம்பான  கொலைகள் மற்றும் பல  குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது , இந்த குற்றசெல்களுக்கு கோட்டாபய ராஜபக்சே ஏற்பாட்டாளராக இருந்தார் .  இந்த கொலைகள் , கடத்தல்களை எவ்வாறு ஈ.பி.டி.பி.யும் ராணுவமும் செய்தார்கள் என்கிற விஷயம்  போதிய ஆதாரங்களுடன் விக்கிலீக்ஸ் ஆவணங்களில் வெளிப்படுத்த பட்டு இருந்தன .

 ஈ.பி.டி.பி ஒரு இலக்கைக் கொல்ல ,அல்லது கடத்த விரும்புவதாக, முதலில் ராணுவத்திற்கு  அறிவிப்பை வழங்க வேண்டும்.  அந்த நேரத்தில் இராணுவதின்  வீதி ரோந்து இலக்கு உள்ள பகுதிகளில் அதிகரிக்க படும் . அதே போல  ராணுவத்தின் எண்ணிக்கையம்  இலக்கு உள்ள பகுதியில் உள்ள   ஒவ்வொரு தெரு/வீதி  மூலையிலும் ஏற்பாடு செய்யப்படும்

ராணுவமும் ஈ.பி.டி.பி யும் திட்டத்தை நிறைவேற்ற  ஒப்புக் கொண்ட நேரம், இலக்கு உள்ள பகுதியில்  அனைத்து ராணுவமும் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடம்  ஒரே  நேரத்தில் இலக்க்கு உள்ள சூழலில் இருந்து பின்னகர்த்தப்படும் .

அந்த நேரத்தில், ஆயுதங்கள் மற்றும் முகமூடி அணிந்த ராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி  துப்பாக்கிதாரிகள், இலக்கை கடத்தி அல்லது கொலை செய்து முடித்து தளம் திரும்ப வேண்டும்

அதன் பின் விளைவுகளை சமாளிக்க . பொலிஸ் விசாரணைகள்  செய்யப்பட வேண்டும் .அனால் எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்

இந்த கொலை/கடத்தல் திட்டத்தை விக்கிலீக்ஸ் தான் ஆதாரங்களுடன் first time வெளிக்கொண்டு வந்து இருந்தது .

உண்மையில் இந்த சம்பவங்களில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை  .இவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. விக்கிலீக்ஸ் உட்பட பலவேறு ஆதாரங்கள் இந்த கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் எதிராக இருக்கிறது  ஆனால்   ஈ.பி.டி.பி ஒரு அரசியல் கட்சியாகவும்  டக்ளஸ் தேவானந்தா என்கிற கொலையாளி ஒரு பாராளமன்ற உறுப்பினராகவும்  சுதந்திரமாக சுற்றி கொண்டு இருக்கிறார்கள் .OMP போன்ற எந்த பயனும் அற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதை விட்டு டக்ளஸ் தேவானந்தா போன்ற  கொலையாளிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்தினால் நிச்சயம் காணாமல் போன பலரை கண்டு பிடிக்க கூடியதாக இருக்கும் ..ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மனம் வைக்காமல்இந்த குற்றங்களுக்கு  நீதி கிடைக்க வாய்ப்பில்லை https://wikileaks.org/plusd/cables/07COLOMBO728_a.html

PS: கிழக்கில் கருணா பிள்ளையான் குழுக்களும் இவ்வாறான கொலை ,கடத்தல் நடவடிக்கைகளுக்கு இலங்கை ராணுவத்தால் பயன்படுத்த பட்டனர் . அதே போல இவ்வாறான கொலை கடத்தல் கற்பழிப்பு போன்ற கொடிய வேலைகளுக்கு இந்தியா ராணுவமும் EPRLF and ENDLF போன்ற பல்வேறு ஆயுத குழுக்களை பயன்படுத்தியது . இந்த கும்பல்கள தான் இப்போது புலிகள் சகோதர படுகொலைகள் செய்தார்கள் , அவர்கள் பாசிட் என சொல்லி திரியும் ஆட்கள் ..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.