இலங்கைக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்க தயார் – சீனா!!


இலங்கை மக்களுக்கு மேலும் நன்மைகளைத் தரக்கூடிய வகையில், ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான ரயில் பாதையில் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் இதனை தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியில் மாத்தறை- பெலியத்தை ரயில் பாதை கட்டப்பட்டமை தென்பகுதிக்கான பயணத்தை இலகுபடுத்தியுள்ளதுடன் உள்ளூர் பொருளாதாரம், சமூக அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அத்தோடு பாதை மற்றும் அணை முயற்சித் திட்டத்தின் கீழ், இலங்கை மக்களுக்கு மேலும் நன்மைகளைத் தரக்கூடிய வகையில், ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு சீனா தயாராக இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.