இலங்கை அரசாங்கம் குறித்து உலக தமிழர் பேரவை அதிருப்தி!!

யுத்தம் நிறைவடைந்த 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தீர்வு வழங்கப்படாமை கவலையளிப்பதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.


அத்தோடு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையை கையாள வேண்டும் என்றும் அப்பேரவை கோரியுள்ளது.

தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசாங்கம் முன்வைத்த கருத்துக்களும் மாநாடு நிறைவடைந்து ஓரிரு வாரத்தின் பின்னர் வெளியாகின்ற கருத்துக்களும் அதிருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக அப்பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை உருவாக்குதல் உள்ளிட்ட பல பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் மூன்று முறை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் பிரேரரணைகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளது என்றும் அதன்படி இலங்கை அரசாங்கம் நடந்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டு பொறிமுறையில் இணைக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றில் வைத்து மீண்டும் கூறி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்னும் காணாமல் போனவர்களில் ஒரு குடும்பத்துக்கேனும் அவர்களது உறவுகள் குறித்த உண்மை நிலைமையை தெரிந்துக்கொள்ள முடியாதிருக்கின்றமை வருத்தமளிக்கின்ற விடயம் என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.