வெளியானது பிளாக் ஹோல்-ன் முதல் புகைப்படம்!

பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது.
நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.

இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த EHT குழு. இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் ``நாம் இப்போது பார்ப்பது நமது சூரிய குடும்பத்தைவிடப்பெரியது, சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு எடை உடையது. இதைவிடப் பெரிய பிளாக் ஹோல்லை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது'' என்றார். ``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம், பிளாக் ஹோல் ஒன்றை படம்பிடித்துவிட்டோம்." என்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்டுப் பூரித்தார் இந்தத் திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன்.

இந்தத் தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த புகைப்படம் பெட்டாபைட்டுகள் (petabytes) அளவில் இருந்தது. அது கிலோபைட்டுகளுக்கு குறைக்கப்பட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது. இதில் நடுவில் இருக்கும் பிளாக் ஹோலைச் சுற்றி அடர்ந்த பிரகாசமான வாயு பார்க்கப்பட்டது. இந்த EHT திட்டத்துக்கான செலவு 60 மில்லியன் டாலர்கள். இதில் 26 மில்லியன் டாலர்களை National Science Foundation (NSF) அமைப்பு செலவழித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.