சகோதர பீடத்திலிருந்து பல்கலைக்கழகம் சார்பாக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் செய்கின்றது!!

பல்கலைக்கழகம் சார்பாக ஊடங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் பார்வையானது மாணவர்கள் மீதான தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வருவதனை முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியமானது  கண்டனம் செய்கின்றது
பொழுது போக்கிற்காகவும், உங்கள் சுயநலத்துக்காகவும் நடக்காத ஒன்றினை நடந்ததாக நாடகமேற்றி எம் சக பீட மாணவர்களின் மேல் திணிக்காதீர்கள்.


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிலும்  கலைத்துறை மாணவர்கள் தமிழ்பற்றுடன் கூடியவர்கள்.அவர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டு சாட்டுவதென்பது தமிழன்னையைக் கொச்சப் படுத்துவதற்கு சமனாக அமைகின்றது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் எமது பல்கலைக்கழகத்திற்கு எதிராக செயற்படுகின்ற சமூகவலைத்தளங்களுக்கு துணைநிற்பவர்கள் முதலில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வது சாலச்சிறந்தது.

உங்கள் பிள்ளைகளும் கல்விகற்கலாம்
உங்கள் உறவுகளும் கல்வி கற்கலாம்
வார்த்தைப்பிரயோகங்களை மனதளவில் யோசித்து பதிவிடுங்கள்.

முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்
Powered by Blogger.