ஹர்பஜன், தாஹிர் பந்துவீச்சு முதிர்ச்சியடைகிறது: எம்.எஸ். தோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய சென்னை 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்தது.
அந்த ஆட்டத்தில் ஹர்பஜன், தாஹிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதுகுறித்து, ஆட்டத்துக்குப் பிறகு தோனி கூறியதாவது:
வயது வெறும் எண் என்பதை ஹர்பஜன், தாஹிர் நிரூபித்துள்ளனர். இருவருமே ஒயின் போன்றவர்கள். காலம் செல்லச் செல்ல அவர்களது பந்துவீச்சில் ஒரு முதிர்ச்சி ஏற்படுகிறது. ஹர்பஜன், தான் விளையாடும் எந்த ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறார்.
தாஹிர், தேவை ஏற்படும்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார். ஃப்லிப்பர், கூக்ளி, லெக்கி என அனைத்து பந்துவீச்சுகளையும் திறம்பட கையாள்கிறார். பேட்ஸ்மேன்களை எளிதாக ஏமாற்றி விடுகிறார் என்று தோனி கூறினார்.
ஆடுகளத்தில் அதிருப்தி: சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் குறித்து தோனி கூறுகையில், இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் விளையாடுவதற்கு அதிகம் விரும்புவதில்லை. இந்த ஆடுகளத்தில் ரன்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுக்க முடிகிறது.
இது பேட்ஸ்மேன்களுக்கு சற்று கடினமானதாக உள்ளது. ஆடுகளத்தின் தன்மை குறித்து அறிய தடுமாறினோம். அப்படி இருந்தபோதும் வெற்றி பெற்றோம் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


ஆகியோரது பந்துவீச்சு முதிர்ச்சியடைவதாக அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.
Powered by Blogger.