மகளிர் ஹாக்கி: இந்தியா வெற்றி!!

மகளிர் ஹாக்கி போட்டியில் மலேசியாவுக்கு எதிரான 4-ஆவது ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் புதன்கிழமை வென்றது.
மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 3-0 என முன்னிலை வகிக்கிறது. முதலிரு ஆட்டங்களில் இந்தியா 3-0, 5-0 என முறையே வென்ற நிலையில், 3-ஆவது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்நிலையில், கோலாலம்பூர் நகரில் புதன்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் இந்தியா அபாரமாக ஆடியது. எனினும், கோல் இன்றித் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி 55-ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இறுதிவரை மலேசியாவுக்கு கோல் வாய்ப்பளிக்காத இந்தியா 1-0 என வென்றது.
மலேசிய அணிக்கு ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும், இந்திய கோல்கீப்பர் சவிதா அதை திறம்படத் தடுத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.