நாயின் மோப்ப சக்தியால் புற்றுநோயைக் கண்டறியலாம்!
'நாயின் மோப்ப சக்தி மூலமே ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவிடலாம்' என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாய்கள் வீட்டை காவல் காப்பதற்கு மட்டுமே என்ற நிலை மாறி, ராணுவம், குற்ற நிகழ்வுகளைக் கண்டறிய உதவுவது எனப் பல்வேறு வகைகளில் அவை உதவியாக இருக்கின்றன. தற்போது, மருத்துவத் துறையிலும் நாய்கள் உதவியாக இருக்கின்றன என்பது அமெரிக்காவின் ஹீத்தர் ஜுனகிரா (Heather Junqueira) என்கிற சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. பிரபல உயிரியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், 'பீக்கில்ஸ்' (Peagles) என்ற வகை நாய்களை வைத்து, புற்றுநோய் கண்டறியும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 'உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்' தொடர்பாக அமெரிக்கன் சொசைட்டி நடத்திய வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், புற்றுநோயை உருவாக்கும் செல்களை நாய்களிடம் மோப்பம் பிடிக்கச் செய்து பழக்கப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, நுரையீரல் புற்றுநோயால் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளையும், நோய் பாதிக்காதவர்களின் ரத்த மாதிரிகளையும் அந்த நாய்களை முகர்ந்துபார்க்கவைத்தனர். இந்தச் சோதனை முயற்சியில், நாய்களால் மோப்பம் பிடித்த 97 சதவிகிதம் 'புற்றுநோய் பாதிப்புகள் உள்ளதை' உறுதிசெய்யப்பட்டது. இந்த ஆய்வின்மூலம் நாய்களின் மோப்பசக்தியால் புற்றுநோயைக் கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.
அதோடு, நாய்க்கு மனிதர்களைக் காட்டிலும் 10,000 மடங்கு மோப்ப சக்தி இருப்பதாகவும், புற்றுநோய் போல பிற நோய்களைக் கண்டறிவதற்கும், நாய்களைப் பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை