பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது வழக்குப்பதிவு!

பிரபல மலையாள டி.வி., சீரியல் நடிகையை பாலியன் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிரபல மலையாள டி.வி., சீரியல் நடிகையான 61 வயதான பெண் ஒருவர், சியா (37) எனும் இளைஞர் தொடர்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கயம்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

அவர் அளித்துள்ள புகாரில், படப்பிடிப்பு தளத்தில் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு சியா என்பவர் அறிமுகமானார். முதலில் தான் மலப்புரத்தை சேர்ந்தவர் என்று கூறிய அவர், பின்னர் தன எர்ணாகுளத்தை சேர்ந்தவர் என மாற்றி கூறினார். அதனால், அவரது இருப்பிடம் எனக்கு சரியாக தெரியவில்லை. முதலில் எனது வீட்டில் வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்த அவர், தொடர்ந்து நான் தங்கியிருந்த தொட்டப்பள்ளி ஹோட்டலில் வைத்தும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதனை அவருடைய செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்ட அவர், என்னுடைய கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் அதனை அனுப்பியுள்ளார். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபர் 12 நாட்களுக்கு முன்பே வெளிநாடு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள திரைத்துறையில் நடிகை ஒருவர் இது போன்ற சம்பவங்களினால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் கும்பல் ஒன்றினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக, பிரபல மலையாள நடிகர் திலீப் மீது குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.,
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.