வைரலாகும் அஜித் பேமிலி போட்டோ!!


தல அஜித் குடும்பத்தின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும்  நடிகர் அஜித் பற்றி எந்த தகவல் வந்தாலும் அதனை ரசிகர்கள் உடனே  வைரலாக்கி விடுவார்கள்.
அந்த வகையில் சமீபகாலமாக அஜித்தின் மனைவி மற்றும் குழந்தைகளுடன்  ஒரு சிலர்  புகைப்படம் எடுத்து அதை  வைரலாக்கி வருகின்றனர். ஷாலினியுடன் தான் பெரும்பாலும் குழந்தைகள் அனோஷ்காவும்  ஆத்விக்கும் வெளியில் செல்வதால் பெரும்பாலான கிளிக்-களில் ஷாலினியே அகப்பட்டுக் கொள்கிறார்கள். பொது இடங்களுக்கு இவர்கள் எங்கு  சென்றாலும், ரசிகர்கள் கூட்டம் இவர்களை சூழ்ந்து விடுகின்றனர். இருப்பினும் முகம் சுளிக்காமல் பொறுமையாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டே அங்கிருந்து நகர்கிறார் ஷாலினி.


இந்நிலையில் அஜித்தின் குடும்பத்துடன் அவரின் ரசிகர்கள் சிலர், புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில்  பதிவிட்டுள்ளனர்.


இதை பார்த்த தல ரசிகர்கள், அனோஷ்கா ஷாலினி உயரத்திற்கு வந்துவிட்டார் என்று கருத்து  கூறி வருகின்றனர். இதிலிருந்து அஜித் ரசிகர்கள் அஜித்தை மட்டும் கொண்டாடுவதில்லை. அவரது குடும்பத்தையும் சேர்த்து கொண்டாடுகின்றனர் என்பது தெளிவாகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.