சென்னைக்காக உணர்ச்சிவசப்படும் தோனிக்கு ஐபில் போட்டியில் தடை விதிக்க வேண்டும்!!

 நடுவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக தோனிக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் சென்னை அணிக்குத் தேவைப்பட்டது.  அப்போது கடைசி ஓவரில், முதல் பந்து  இடுப்புக்கு மேல் வீசப்பட்டதால்  நடுவர் ஒருவர் நோ பாலாக அறிவித்தார். மற்றொரு நடுவர் அதை மறுக்க, நோ பால் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இதை கண்ட தோனி, மைதானத்திற்குள் வந்தார். இதை பார்த்த சென்னை ரசிகர்கள், தோனி ...தோனி.... என்று ஆர்ப்பரித்தனர். இதையடுத்து அவர் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவரை சமாதானம் செய்து நடுவர்கள் அனுப்பினர். கடைசி ஒரு பந்தில்  3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்  மிச்செல் சன்டெர்   சிக்ஸர் அடித்து  சென்னை அணிக்கு  வெற்றியைத் தேடித் தந்தார்.

இருப்பினும் நடுவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காகவும், அவுட்டான வீரர் ஒருவர் ஆட்டம் நடைபெறும் போது, மைதானத்திற்குள் வரக்கூடாது என்ற விதிமுறையை மீறியதற்காகவும்,  தோனிக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது .

இதுதொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்கள்  உலவி வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர்  சேவாக் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'நான் தோனியை  கோபப்பட்டுப் பார்த்ததில்லை. ஒருவேளை அவர் இந்திய அணிக்காக இப்படி செய்திருந்தால் ஆதரவு கூறியிருப்பேன்.ஆனால் அவர் சென்னை அணிக்காக ஆடும் போதுதான் உணர்ச்சிவசப்படுகிறார். களத்தில் இருந்த சென்னை வீரர்களே பேசி தீர்த்திருப்பார்கள். தோனி  செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தோனிக்கு 2 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும். அப்போது தான் அது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் இப்போது விட்டுவிட்டால்,  வேறொருவர் மீண்டும் வேறொரு சூழலில்  நடுவரிடம் வாக்குவாதம் செய்ய நேரிடும். இப்படியே போனால் நடுவருக்குக்காண முக்கியத்துவம் என்னாவது? என்று கோபமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்த கங்குலி, எல்லோரும் மனிதர்கள்தானே. தோனியின் போராட்ட உணர்வு அப்படி நடந்து கொள்ள வைத்துள்ளது. இது மிகவும் முக்கியமானது என்று என்று கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் அவரது ரசிகர்களோ, எந்த போட்டியிலும் பொறுமையை இழக்காத தல தோனியையே கோபப்படுத்திடீங்களே  என்று அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.