குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும் ஆம்லெட்!!

எப்போதுமே குழந்தைகளுக்கு பிடிவாதம் அதிகம்.அவர்கள் வச்சதுதான் சட்டம்.அவர்களுக்கு பிடித்தமான உணவுகளைக் கொடுக்கலேன்னா அழுது ஊரைக்கூட்டுவதுக்கும் அஞ்ச மாட்டார்கள்.அதுக்காக,அவர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக கண்டதையும் சாப்பிடக் கொடுக்க முடியுமா?!


அடிக்கடி சாதம் கொடுத்தாலும் போரடிக்குதுன்னு சொல்லி சில குழந்தைகள் பட்டினி கிடந்தது சாதிக்கப் பார்ப்பார்கள்.அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஆம்லெட்டை செய்து கொடுத்தால் பிந்து அப்பளம் சாப்பிடறமாதிரி அப்படியே சாப்பிடுவாங்க.
இது நீங்கள் வழக்கமாக செய்கிற ஆம்லெட் போலத்தான்.அதன் செய்முறைகளில் சின்ன மாற்றம் செய்து இந்த ஆம்லெட் செய்து பார்க்கப்போகிறோம்.
Cd
தேவையான பொருட்கள்
முட்டை -2
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய் -2
மல்லித்தழை ஒரு கை பிடி
எண்ணெய் தேவையான அளவு 
எப்படிச் செய்வது 
சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.அதோடு பச்சைமிளகாய்,மல்லித்தழை மூன்றையும் சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.முட்டையை வழக்கம்போல் நுரை வருகிற அளவுக்கு கலக்குங்கள்.இதில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்குங்கள்.தேவையான அளவு உப்பு,அதோடு பொடியாக உள்ள மிளகுத்தூள் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி தோசை கல்லில் வழக்கமான ஆம்லெட் போலவே போட்டு எடுங்கள்.
DFds
வழக்கமான ஆம்லெட்டில் உள்ள வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் குழந்தைகள் ஞாபகமாக எடுத்து தட்டில் ஓரமாக வைத்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள்.இதில் அப்படிஇல்லை,மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள்.இது இயல்பாகவே குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடியது.

No comments

Powered by Blogger.